திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நகராட்சி பூங்கா உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அங்கு பொதுமக்கள் வசதிக்காக கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த கழிவறை எப்போதும் மூடியே கிடப்பதால், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் இயற்கை உபாதையை கழிக்க அவதிப்படுகின்றனர். எனவே பூட்டிக்கிடக்கும் கழிவறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், திருப்பத்தூர்.