விளையாட்டு மைதானத்தில் கம்பிகள் சேதம்

Update: 2022-07-28 11:59 GMT
ஆரணி நகரில் கோட்டை மைதானத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. அது, விளையாட்டுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மைதானத்தைச் சுற்றிலும் நடை பயிற்சிக்கான தளம் உள்ளது. அதில் ஸ்டீல் தடுப்பும் கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தன. சமீபத்தில் கோட்டை மைதானத்தில் பொழுதுப்போக்குக்காக அமைக்கப்பட்ட ராட்டினங்கள், விளையாட்டு அம்சங்களை காண வந்தவர்கள் கம்பிகள் மீது அமர்ந்து உடைத்துச் சேதப்படுத்தி விட்டனர். அதை நகராட்சி நிர்வாகம் சீர் செய்யுமா?
-பொதுமக்கள், ஆரணி.

மேலும் செய்திகள்