பராமரிப்பு இன்றி கிடக்கும் பூங்கா

Update: 2022-07-27 13:46 GMT

பெங்களூரு விஜயநகர் டெலிகாம் லே-அவுட் பகுதியில் ஒரு பூங்கா உள்ளது. அங்கு சிறுவர்கள் விளையாட விளையாட்டு உபகரணங்களும் உள்ளன. ஆனால் அந்த பூங்கா சரியாக பராமரிக்கப்படவில்லை. பராமரிப்பு இன்றி கிடக்கும் அந்த பூங்காவில் புற்கள் வளர்ந்து உள்ளன.

விளையாட்டு உபகரணங்களும் உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த பூங்காவை குடியிருப்புவாசிகள் பயன்படுத்துவது இல்லை. பொழுதுபோக்கவும், குழந்தைகள் விளையாடும் வகையிலும் அந்த பூங்காவை உடனடியாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்