நாமக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் திறனை ஊக்குவிக்கவும், ஆரோக்கியம் மேம்படவும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சில மைதானங்கள் பராமரிப்பு இன்றி காணப்படுவதுடன் இதில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து காட்சி அளிக்கிறது. இதனால் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மைதானங்களை பராமரிக்க வேண்டும்.
-கோபால், நாமக்கல்.