பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2023-08-30 16:36 GMT

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலம் 19-வது வார்டில் தர்மநகர் பசுமைவெளி பூங்கா உள்ளது. இந்த பூங்கா பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் அங்குள்ள ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் சேததடைந்து உள்ளன. ஊஞ்சல் இல்லாததால் சிறுவர்கள் கயிறு கட்டி விளையாடும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பூங்காவை பராமரிப்பார்களா ?

-சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும் செய்திகள்