இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான கல்வராயன்மலை கரியாலூரில் படகு குழாம் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் அருகில் உள்ள சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்வார்கள். தற்போது பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து உபயோகமற்ற நிலையில் உள்ளது. ஆகவே சேதமடைந்த சிறுவர் பூங்காவை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.