சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

Update: 2023-01-11 16:55 GMT

சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் லேடீஸ் சீட் என்ற பகுதி சுற்று சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் அதன் அருகே சென்று செல்பி எடுக்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சுற்று சுவர் கட்ட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

-முகமது, ஏற்காடு.

மேலும் செய்திகள்