நாய்களை கட்டுப்படுத்துவார்களா?

Update: 2026-02-08 18:30 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. சாலையோரம் 20-க்கும் மேற்பட்ட இறைச்சிக்கடைகள் உள்ளன. அந்தக் கடைகளில் இருந்து இறைச்சிக்கழிவுகள், எலும்பு துண்டுகள் சாலையில் வீசப்படுகின்றன. அதை சாப்பிடுவதற்காக ஏராளமான நாய்கள் வருவதால், இருசக்கர வாகனம் விபத்தில் சிக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

-ராகுல், தூசி.

மேலும் செய்திகள்