ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து லவ்டேல் சந்திப்பு வரை பாதாள சாக்கடைக்காக கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. முக்கிய சாலையான இந்த பகுதியில் பணிகள் மந்தமாக நடப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே கால்வாய் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.