குளிர்சாதன பெட்டி பழுது

Update: 2026-10-11 17:52 GMT
பண்ருட்டி அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ள குளிர்சாதன பெட்டி கடந்த சில மாதங்களாக பழுதடைந்து கிடக்கிறது. இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை அங்கு பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூடுதல் சடலங்கள் வரும் நேரங்களில் கடலூர் அல்லது குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. எனவே, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்கும் வகையில் புதிய குளிர்சாதன பெட்டி அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்