புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே பாதாள சாக்கடை மூடியை சுற்றியுள்ள பகுதி சேதமடைந்து கிடக்கிறது. இதனால் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?