வாணியம்பாடி நகராட்சி அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகம் உள்ளது. இங்கு அதிகாரிகள் இருப்பதில்லை. இதனால் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. எனவே உணவு பொருட்கள் சம்பந்தமாக புகார் கூறுவதற்கு முடியாத நிலை உள்ளது. பல மாதங்களாக இந்த பணிக்கு யாரும் நியமிக்கப்படாததால் வேறு ஊரிலிருந்து வருவார்கள் என்ற ஒரே பதில் கடந்த ஓராண்டு காலமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நியமிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.