பரமத்திவேலூர் பள்ளி சாலை, பஸ் நிலையம், பேட்டை, திருவள்ளுவர் சாலை, முக்கோண சாலை மற்றும் மோகனூர் சாலையில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்களையும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களையும் தெருநாய்களின் தொல்லையால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்களும் தெருநாய்களின் தொல்லையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.