கொசுத் தொல்லை

Update: 2026-08-02 14:11 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் கொசு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆர்.வி. நகர், பழனியப்பன் தெரு, மயில் பாளையம் ,இந்திரா நகர் ,பெரிய கடை தெரு மற்றும் இதர பகுதிகளிலும் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கொசு கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுக்கோட்டை நகர் பகுதியில் கொசு மருந்து அடிப்பதுடன், உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை.

மேலும் செய்திகள்