ஏரியை தூர்வார கோரிக்கை

Update: 2026-08-02 13:27 GMT

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனியன்குறிச்சி கிராமத்தில் உள்ள சின்னேரியில் தனியார் சுரங்க நீர் வெளியேற்றப்படுவதாலும், சீமைக்கருவேல மரங்கள் மற்றும் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதாலும் ஏரியை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நீரால் தோல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதுடன், கால்நடைகளும் தாகத்திற்கு தண்ணீர் குடிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றன. எனவே, ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்தி, கரையை உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்