தேங்காப்பட்டணம் பஸ்நிலையம் சந்திப்பு பகுதியில் இருந்து துறைமுகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் ஒரு மின்கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் மின்கம்பத்தை அகற்றி சாலையோரத்தில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தாஹா, தேங்காப்பட்டணம்.