புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கோத்திராப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் உணவுக்கூடம் பழுதடைந்து மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கூரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.