விழுப்புரம் மாம்பழப்பட்டு அருகே கமலா கண்ணப்பன் நகர் மற்றும் தையல் நாயகி சாலை ஆகிய பகுதிகளில் சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு விதமான தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதனை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.