பாழடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2026-08-02 13:12 GMT

புதுக்கோட்டை மாவட்டம் காலடிப்பட்டி சத்திரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் மேற்கூரைகள் எதுவும் இல்லாததால், சத்திரம், வாதிரிப்பட்டி, புலவம்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்களை சேர்ந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடும் வெயிலிலும், மழையிலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சிரமப்படுவதால், இந்த பயணிகள் நிழற்குடையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்