திருப்பூர் பி.என்.ரோடு- 60 அடி ரோடு சந்திப்பில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை முற்றிலும் சேதமடைந்து பயணிகள் பயன்படுத்த தகுதியற்றதாக உள்ளது. மேற்கூரைகளும் பலவீனமான நிலையிலேயே உள்ளது.மேலும் பஸ் நிறுத்தம் அருகிலேயே அப்பகுதியில் சேரும் குப்பைகளை கொட்டி உள்ளனர். அதற்கு அவ்வப்போதுமர்ம நபர்கள் தீ வைத்து விடுகின்றனர். இதனால் எந்த நேரமும் அங்கு புகை மூட்டமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமான பயணிகள் நிழற்குடையை சீரமைத்து அதன் அருகில்குப்பை கொட்டி தீ வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.