முக்கூடல்- கீழ பாப்பாக்குடி செல்லும் புதுகுளத்து பாதையில் பட்டுப்போன பனை மரம் சாய்ந்த நிலையில் இருப்பதாக ஆதிமூலம் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து ஆபத்தான பனை மரம் அகற்றப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.