பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலக பஸ் நிறுத்தத்தில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. எந்நேரமும் சாலையிலேயே நடமாடும் இந்த தெருநாய்களால், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த பகுதியில் நிற்கவோ, அந்த வழியாக பயணிக்கவோ வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.