தெருநாய்கள் தொல்லை

Update: 2026-06-28 16:03 GMT

கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதோடு சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களை கடிக்க துரத்துகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடந்து செல்ல முடியாமல் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்