தூத்துக்குடி வ.உ.சி. சாலை அருகில் உள்ள நல்பெருமாள் பூங்கா பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. அங்குள்ள கழிப்பறை சேதமடைந்த நிலையில் உள்ளது. குப்பைகளும் மலைபோன்று குவிந்து கிடக்கின்றன. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே பூங்காவை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.