வேடசந்தூர் தாலுகா குளத்துப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.