வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இங்கு மதுகுடிக்கும் மதுப்பிரியர்கள் போதை தலைக்கேறியதும் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடப்பதுடன், மது பாட்டில்களை குடித்துவிட்டு அங்கேயே உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து டாஸ்மாக் கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.