தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. பொதுமக்கள் இந்த ரெயில்வே மேம்பாலத்தை கடந்து தான் சந்தை மேடு, ராசலாம்பட்டி, அண்ணல் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த படிக்கட்டுகள் சேதம் அடைந்தும், செடிகள் முளைத்தும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதம் அடைந்த படிக்கட்டுகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.