மொரப்பூர் ஒன்றியம், நவலை ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பெரும்பாலான குடும்பங்களில் கறவை மாடுகள் வளர்த்து வருகின்றனர். கறவை மாடுகளுக்கு நோய்கள் ஏற்படும் போது சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொரப்பூர் அல்லது ஆர்.கோபிநாதம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களுக்கு கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. எனவே நவலை ஊராட்சியில் கால்நடை மருந்தகம் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.