விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இந்த தெருநாய்கள் அவ்வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரிவதோடு வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்தி செல்கின்றது. இவ்வாறு தொடர் தொல்லையில் ஈடுபடும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விரைந்து முன்வருமா?