சுகாதார வளாகம் அமைக்க வேண்டுகோள்

Update: 2026-05-24 15:05 GMT

பெரம்பலூர் கடைவீதி பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. மேலும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக இருக்கும் நிலையில், இப்பகுதியில் சிறுநீர் கழிக்கும் சுகாதார வளாகம் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக இயற்கை உபாதை கழிக்கும் வகையில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்