ரெயில் பயணிகள் அவதி

Update: 2026-05-24 15:02 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ரெயில்கள் முன்பதிவு செய்யும் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த முன்பதிவு நிலையமானது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மதியம் வரை மட்டும் செயல்பட்டு வருகிறது. இதனால் ரெயில் பயணிகள் மற்ற நாட்களில் ரெயில் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருவதால், ரெயில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில் முன்பதிவு நிலையத்தை வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்