பயணிகள் நிழல் குடை அமைக்கப்படுமா?

Update: 2026-05-24 15:01 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையில் ரோவர் வளைவு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நின்று தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ரோவர் வளைவு அருகே புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்