சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி

Update: 2026-05-24 14:55 GMT

விருதுநகர் மாவட்டம் பட்டேல் ரோட்டில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் அந்த வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகளவில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட பகுதியில் உள்ள சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்