ஆபத்தான கிணறு

Update: 2026-05-24 14:15 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி பெருவளநல்லூர் பஸ் நிலைத்துக்கு அருகிலேயே மிகவும் ஆபத்தான நிலையில் திறந்த வெளியில் கிணறு ஒன்று உள்ளது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில், குழந்தைகள், முதியவர்கள் எதிர்பாராத விதமாக தவறி உள்ளே விழும் நிலையில் இந்த கிணறு உள்ளது. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கிணற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்