நிழற்குடைக்கு புதிய கட்டிடம் எப்போது?

Update: 2026-05-24 13:59 GMT

கூடலூர் தலைமை தபால் நிலையம் எதிரே இருந்த பயணிகள் நிழற்குடை கட்டிடம் மிகவும் பழுதடைந்து இருந்தது. இதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியது. ஆனால் சாலையோரத்தில் மிக நெருக்கமாக கட்டிடம் கட்டப்பட்டதால், வாகனங்கள் மோதி மீண்டும் கட்டிடம் சேதம் அடையும் நிலை ஏற்பட்டது. அத்துடன் பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது. இதனால் கட்டிட பணி நிறுத்தப்பட்டது. எனவே சாலையில் இருந்து சிறிது தூரம் தள்ளி கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்