கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் நடைபாதைகளில் தெருநாய்கள் படுத்து கிடக்கின்றன. அவை அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களை சில சமயங்களில் கடிக்க பாய்கின்றன. இதனால் அவர்கள் நடைபாதைகளில் செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.