கன்னியாகுமரி மகாதானபுரம் சந்திப்பில் பெரிய ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொற்றையடி வழியாக நாகர்கோவில் செல்லும் 4 வழிச்சாலை, கன்னியாகுமரி கடற்கரை சாலை, விவேகானந்தபுரம் செல்லும் சாலை, கொட்டாரம் செல்லும் சாலை, மகாதானபுரம் செல்லும் சாலை உள்பட 6 சாலைகள் சந்திக்கின்றன. வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இந்த சந்திப்பிற்கு வந்த பிறகு எந்த சாலை எங்கு செல்கிறது என்பது தெரியாமல் குழப்பத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. மேலும், வழி தவறி செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த சந்திப்பில் சாலைகள் செல்லும் விவரம் குறித்த தெளிவான வழிகாட்டி பலகையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனந்தநாராயணன், மருங்கூர்.