கரூர் மாவட்டம் புகழூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை புன்செய் புகழூர் பேரூராட்சி, புகழூர் நகராட்சி, நன்செய் புகழூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வியாபாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்பட்டதில் இருந்தே வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும்.