தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் தேரி சாலை விரிவாக்க பணியின்போது குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி காமராஜர் நகர், சக்கம்மாள்புரம் பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று ஏஞ்சலின் ஜெனிட்டா என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தக்க சமயத்தில் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்