சேரன்மாதேவி யூனியன் தெற்கு வீரவநல்லூர் புதூர் கிராமத்தில் கோவில் அருகில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் நிரம்பி தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே வாறுகால் அடைப்பை அகற்றி, கழிவுநீர் வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.