திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் கட்டண வாகனநிறுத்தத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது ரெயில்நிலைய சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வாகன நிறுத்துமிடம் அகற்றப்பட்டுள்ளது. இதனால் தினசரி ரெயில் நிலையம் வந்து செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும் வாகனங்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. எனவே விரைந்து வாகனநிறுத்துமிடம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.