உடுமலையை அடுத்த குரல்குட்டையில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லாததால் மேற்கூரை பழுதடைந்து காணப்படுகிறது. மேலும், வளாகத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அங்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே கட்டிடத்தை சீரமைத்து, புதர்களை அகற்ற வேண்டும்.