தெருநாய்களால் குழந்தைகள் அச்சம்

Update: 2026-05-17 13:16 GMT

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் தமாணிக்கொம்பை, பிள்ளையார் கோவில் தெரு, ரங்கம்மாபேட்டை உள்பட 15 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 15,000 மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் பகல் இரவு நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் மக்கள், குழந்தைகள் நடமாட அச்சப்படுகின்றனர். விளையாடும் சிறுவர்களை நாய்கள் துரத்தி கடிக்க வருகின்றன. நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்