அரியலூர் பஸ் நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பஸ் நிலையத்தின் வளாகத்திற்குள் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் பலர் மது அருந்திவிட்டு படுத்துள்ளனர். இவர்கள் இரவு நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்களும், முதியவர்களும் அச்சத்துடன் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.