திருச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் காத்திருப்போர் பகுதியில் உள்ள நாற்காலி அருகே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற வருபவர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள் அப்பகுதியில் உட்காரும் போது இடையூறாக உள்ளது. எனவே இந்த குடிநீர் குழாயை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.