குளச்சலில் கிருஷ்ணபிள்ளை தெரு உள்ளது. இந்த தெரு சாலையின் பக்கவாட்டில் குடிநீர் இணைப்பின் பாதுகாப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் மேற்பகுதியில் கான்கிரீட் சிலாப்புகள் போட்டு மூடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த கான்கிரீட் சிலாப்புகள் சரியான முறையில் மூடாத நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விபத்து ஏற்படும் முன் கான்கிரீட் சிலாப்புகளை சிரமைக்க வேண்டும்.
-அமீன், குளச்சல்.