மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-05-17 11:40 GMT

நாகர்கோவில்- பறக்கை சாலையில் கோட்டார் பைத்துல்மால் நகரில் சாலையோரத்தில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். பள்ளியின் முன்பு உள்ள சாலையில் மாணவ- மாணவிகள் பாதுகாப்பிற்காக வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை சீரமைப்பு பணியின்போது 2 வேகத்தடைகளும் அகற்றப்பட்டன. தற்போது வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளியின் அருகில் வேகத்தடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்