சேதமடைந்துள்ள இருக்கைகள்

Update: 2026-05-17 11:07 GMT

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் ஜியோ பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து சுற்றுப்புற பகுதிகளுக்கு ஏராளமான பொதுமக்கள் பஸ் ஏறி சென்று வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் நிழற்கூடத்தில் உள்ள இருக்கைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள் கால் கடுக்க பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். மேலும் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் பயணிகள் நிழற்கூடம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பயணிகள் நிழற்கூடத்தில் உள்ள இருக்கைகளை சீரமைத்து, மின்விளக்கு வசதி ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்