கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வாகனநிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கூரை அமைக்காததால் அங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் வெயிலிலும், மழையிலும் நின்று சேதமடையும் நிலை உருவாகியுள்ளது. எனவே மேற்கூரை அமைத்துத்தர வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.