சாலையில் திரியும் கால்நடைகள்

Update: 2026-05-10 15:08 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் பாதசாரிகள் அச்சமடைவதுடன் இரவு நேரங்களில் சில கால்நடைகள் சாலையில் ஆங்காங்கே தூங்குவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்